ஒம் குலகுரு ஜம்பு மகாரிஷி போற்றி!
ஜம்புதாச அடிகளார்
கடந்துவந்த பாதை...
உலகில் வாழும் அனைத்து மானிடர்களைப் போன்று சிறு வயதில் தன் வாழ்வினை தொடங்கிய ஜம்புதாச அடிகளார் ஒரு காலகட்டத்தில் பொதுவான மானிட வாழ்வின் செயல்பாட்டில் இருந்து இறைச் சிந்தனைக்கு மனம் மாறுகிறார்.
அதன் விளைவாக இறைத்தேடலில் பல வரலாற்று ஆய்வு நூல்களைத் தேடிப் பிடித்துப் படித்து, பல இறை ஞானவான்களைச் சந்திப்பது, குருமார்களைச் சந்திப்பது எனப் பல ஆய்வுகளைச் செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்குக் கடல்கடந்துச் சென்றுவந்துள்ளார்.
”ஆயிரம் புறகுருமார்களைக் காண்பாய்; உன்னுள் இருக்கும் அககுருவைக் காணும் வரைக்கும்! கண்ட அககுரு உணர்த்திடுவாரே உமக்கான குலகுருவை!”
என்பதைப் பிறகு அறிகிறார்.
அதன் பிறகுத் தான் பிறந்த வன்னியர் குலத்தைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தேடி அலைகிறார். அதன் விளைவாக பல்வேறு அரிய அதிசயத்தக்க செய்திகள் கிடைக்கப் பெறுகிறார். அப்படி ஆய்வுகளை மேற்கொண்டதின் பயனாகத்தான், தெற்கே குமரிக்கண்டத்தில் அவதரித்த ‘’ஜம்பு மகாரிஷி’’ பற்றிய அரிய தகவல்களைப் பெறுகிறார்.
மேலும் தீவிரமாக ‘’ஜம்பு மகாரிஷி’’ பற்றி விவரங்களைப் பலரிடம் கேட்டும் நேரில் ஜம்பு தீவு, திருச்சி, இலங்கை என பல இடங்கள் சென்றும் விவரங்களைச் சேகரிக்கிறார். அப்படி செய்த ஆய்வுகளின் அடிப்படையில், குலகுரு வழிபாடு என்ற இறைத் தத்துவத்தை அறிகிறார். நம் குலகுருவின் வரலாற்றைக் கண்டு வியந்தவர் சதா சர்வ காலமும் நமது வன்னியர் குலகுரு ஜம்பு மகாரிஷியின் வரலாற்றைத் தேடுவதும் அதைப்பற்றியே மக்களிடம் பேசுவதும் பரப்புவதுமாக இருந்தமையால் மக்கள் அனைவரும் இவரை ”ஜம்புதாச அடிகளார்” என்று அழைக்கத் தொடங்கிவிட்டனர்.
இப்போது ”ஜம்புதாச அடிகளார்” என்ற பெயரே நிலைத்துவிட்டது.
’’ஜம்புதாச அடிகளார்” அவர்களுக்கு
சோதிடக்கலை,
வைத்தியம்,
வானியல் சாத்திரம்,
வாஸ்து சாத்திரம்,
மரணத் தத்துவம்
போன்ற பல்வேறு கலைகளை ஞானமாகவே சித்தி பெற்றவர் என்பது சிறப்பான அம்சமாகும்.
இந்த மானிட உலகில் வாழும் உயிர்களுக்கு மரணம் என்பதே ஒன்று இல்லை எனும் பிரம்மத் தத்துவத்தை அறிந்தவர் ’’ஜம்புதாச அடிகளார்” அவர்கள்.
”குலகுரு வழிபாட்டை மீள் உருவாக்கம் செய்வோம்!
குலகுரு வழிபாடே நம் குலத்தைக் காக்கும்!”
என்ற இறைத் தத்துவத்தை முன்வைத்து வன்னியர்களின் குலகுருவான ஜம்பு மகாரிஷியின் வழியில் நமது குலப் பெருமையினைப் பல ஆய்வுகளுக்குப் பிறகு நமக்கு எடுத்துரைக்க வேலூர்க்கு அருகேயுள்ள சந்தன மாநகரமாக விளங்கும் திருப்பத்தூர் அருகே ஒரு வேளாண் குடியில் பிறந்த ஜம்புதாச அடிகளாரின் இந்த குலகுரு வழிபாட்டை மீள் உருவாக்கம் பணிக்காக இப்போது நம்மையும் ஈடுபடுத்திக் கொள்ளும் தேவையும் கடமையும் காலம் நமக்கு கையளித்துள்ளது.
© 2025 Copyrights Jambhu Magarishi Thirukkoyil Aashramam. All Rights Reserved
Designed by Loginfotech