குலகுரு வழிபாட்டை மீள் உருவாக்கம் செய்வோம்;
குலகுரு வழிபாடே நம் குலத்தைக் காக்கும்!

ஜம்பு மகாரிஷி திருக்கோயில் ஆசிரமம்

Jambhu Magarishi Thirukkoyil Aashramam

ஓம் குரு வாழ்க!                ஓம் குருவே துணை!

 

வன்னியர் குலகுரு

ஜம்பு மகாரிஷி

(ஒரு வரலாற்றுப்  பார்வை )

அண்டத்தின் இயக்கம் என்பது

பிரம்ம தத்துவம்,

விஷ்ணு தத்துவம்,

சிவ தத்துவம்

என்ற மூன்று தத்துவங்களால் ஆனது. இந்த மூன்று தத்துவங்களை உணர்ந்தவர்களையே கடவுளர்களாக நாம் வழிபடுகிறோம். அவர்கள்

பிரம்மா,

விஷ்ணு,

சிவம்

என நம்முள் இறைத்தன்மையை உணரச் செய்வதற்காக தத்துவ வழிபாடு முறைகளை உருவாக்கம் செய்தனர். அதன் வழியில் முதல் முன்னோடியாக விளங்கியவர் நமது வன்னியர் குலகுருவான "ஜம்பு மகாரிஷி" ஆவார்.

’’ஜம்பு மகாரிஷி’’  இன்றைக்கு உள்ள இந்திய துணைக் கண்டத்தின் தென்கோடியில் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டத்தில் அவதரித்த மகாரிஷி ஆவார். அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் அந்த தீவு முழுமைக்கும் வெந்நாவல் மரங்களை தன் தவ வலிமையால் அந்த கண்டம் முழுவதும் உயிர் பெறச் செய்தார். அதன் காரணமாக அந்த தீவுக்கு "ஜம்பு நாவலந்தீவு" என்று பெயரானது.

வெந்நாவல் மரத்தின் இலைகள், பட்டைகள், பழங்கள், வேர்கள் என அம்மரத்தின் அனைத்துப் பாகங்களில் உள்ள உன்னத தெய்வீக மருத்துவத் தன்மையை மக்களுக்கு உணர்த்தியதில் மக்கள் அனைவரும் அந்த வெந்நாவல் மரத்தினைப் போற்றி வணங்கி வழிப்பட்டும் பயன்படுத்தியும் வந்ததாலும் அந்த தீவு "ஜம்பு நாவலந் தீவு’’ என்று அழைக்கப்பட்டது.

"ஜம்பு மகாரிஷி"யை நாவலங்குரு, ஜம்புகேஸ்வரர், ஜம்புலிங்கேஸ்வரர், ஜம்பு நாதர், ஜம்பு கண்டநாதர், ஜம்பு பிதாவர், ஜம்பு நீலகண்டர், ஜம்பு மாமுனி, இறை ஞான தத்துவ வழிபாடு குரு, ஞான குரு, குலகுரு, ஆதிகுரு போன்ற பல்வேறு பெயர்களில் ஆசிய நிலப்பரப்பு முழுமைக்கும் இருந்த மக்களால் வணங்கப்பட்டார்.

’’ஜம்பு மகாரிஷி’’ தன் இறைஞான பணியின் தொடர்ச்சியாக தத்துவ வழிபாட்டு முறைகளை மானிடர்களுக்கு வாழ்வியல் முறையில் வாழ்ந்த வன்னியக் குல மக்களின் தீவாக "ஜம்பு நாவலந்தீவு" மாறியது. அத்தீவிலிருந்து உன்னத மானுட வாழ்வியல் தத்துவங்களையும் இறைஞானத்தினையும் பிற பகுதி மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற இறைஞானச் சிந்தனையுடன் நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணப்பட்டார்.

 

’’ஜம்பு மகாரிஷி’’ சென்ற இடமெல்லாம் அவர் அருளிய போதனைகளை மட்டுமல்லாது வெந்நாவல் மரத்தில் உள்ள தெய்வீக மருத்துவத் தன்மையை பற்றியும் மருத்துவப் பயன்பாடு, நோய் தடுக்கும் தன்மையும் எடுத்துரைத்துடன் சென்ற இடமெல்லாம் வெந்நாவல் பழக் கொட்டைகளையும் தூவியும் நட்டும் மரங்கள் வளர செய்தார்.

குலகுரு ஜம்பு மகாரிசியின் வாழ்வியல் தத்துவத்தை உணர்ந்த வன்னியர் குல மக்கள் பல பிரிவுகளாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்றுப் பரப்பி வாழ்ந்து வந்தனர்.

இன்றைய தமிழ்நாட்டின் திருச்சி காவிரி ஆற்றங்கரை ஓரமுள்ள திருவானைக்காவல் பகுதியில் நாவலந்தீவில் இருந்ததுப் போன்ற நாவல் மரம் ’’தல விருட்சமாக’’ இன்றும் உள்ளது. ஆனால் ஒரு காலத்தில் இந்த பகுதியே வெந்நாவல் காடாக திகழ்ந்திருந்தது.

இன்றுள்ள சமய புராணங்களின் படியும் இலங்கை வரலாற்று நூலான மகாவம்சம் என்ற நூலிலும் தீபகற்ப இந்தியாவைக் குறிப்பிட "ஜம்பு தீவு" என்ற பெயர் இடம் பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அண்டம் ஏழு பெருங்கடல்களால் சூழப்பட்டுள்ளது.

அவைகள்:

1) ஜம்பு தீவு,

2) இலட்சத்தீவு,

3) சல்மாலித்தீவு,

4) குசத்தீவு,

5) கிரவுஞ்சத்தீவு,

6) சகத்தீவு, 

7) புஷ்பகரத்தீவு என்பதாகும்.

இதில்கூட ஜம்பு மகாரிஷியின் பெயரிலும் ஒரு ’’தீவு ’’ இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

குறிப்பாக ஜம்பு மகாரிஷி தத்துவ வழிபாட்டு முறைகளை உணர்த்தி அதனை மானிடர்களின் வாழ்வில் கடைபிடிக்கச் செய்தார். அதன் மூலமாக மானிடர்களின் உடல் நலத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து உடலுக்கு தேவையான உணவு முறைகள், உடல் வலிமைக்குத் தேவையான உடற்பயிற்சிகள், உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருத்துகள் போன்றவற்றில் முதிர்ச்சி நிலை வாழ்வினை வாழ்ந்தனர்.

மேலும் வெந்நாவல் மரத்தின் ஞானப் பழத்தைக் கொண்டுக் குமரிக்கண்டத்தின் தீவு எங்கும் பரவிருந்த வன்னியர் மக்களுக்கு ஏற்படும் மனம் சார்ந்த தீரா நோய்களுக்கும் உடல் சார்ந்த பெரும் நோய்களுக்கும் மானிடரின் பிறப்பு முதல் இறப்பின் பதிவு வரை நலம் பெறச் செய்து உணரச் செய்தார்.

இந்த ஞானப்பழத்தைத் தான் முருகர் அவ்வையாருக்கு ஞானத்தைத் தெலிவூட்டச் செய்வதற்க்காக கொடுத்த ஞானப்பழம் ஆகும்.

இவ்வளவு போற்றுதலுடன் வணங்கக்கூடிய பெருமைகளைக் கொண்டவரே நமது வன்னியர் குலகுருவாக மகாரிஷியாக இருந்த "ஜம்பு மகாரிஷி". இவரே நமது வன்னியக் குலத்தில் ஆதியில் உருவானவர். ஆனால் திட்டமிட்டு மறைக்கப்பட்ட ஒருவர் தான் நமது ஆதி குலகுருவான ’’ஜம்பு மகாரிஷி" ஆவார். ஏன் அவர் திட்டமிட்டு மறைக்கப்பட்டார்? என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

பிரம்ம தத்துவம்,

விஷ்ணு தத்துவம்,

சிவ தத்துவம் போன்ற மூன்று தத்துவங்களையும் "ஜம்பு மகாரிஷி’’ இதையே தத்துவ வழிபாட்டு முறைகள் ஆக்கி கடைப்பிடிக்கச் செய்து வாழ்ந்தவர்களையே வன்னியர்கள் என்கிறோம்.

’’ஜம்பு மகாரிஷி’’யின் இந்த மூன்று தத்துவங்களையும் முதலில் கடைபிடித்து உணர்ந்து வாழ்ந்தவர்களே வன்னியர்கள் .மேலும் மற்றவர்களுக்கும் வழிகாட்டியவர்களும் வன்னியர்களே!

63 நாயன்மார்களில் 12 பேர் வன்னியர் குலத்தைச் சேர்ந்தவர்களே என்பது எவ்வளவு பெருமைமிகு செய்தி!

இப்படி  நாகர்கள், நாவலர், ஆசிவகர், களப்பிரர், சேரர், சோழர், பாண்டியர், பல்லவர், மழவர், நாயக்கர், சம்புவராயர், கண்டர், நாயகர், நாயனார், கவந்தன், வர்மா, கள்ளர், ரெட்டி, மகாவம்சர், வன்னியர், படையாச்சி, பள்ளி, கவுண்டர், வன்னியக் குல சத்திரியர், , அக்னி குலத்தார் எனும் பல பெயர்களில் பல இடங்களில் பரவி வியாபித்து பல்லாயிரம் ஆண்டுகாலமாய் வன்னியர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படி பல பெயர்களில் வாழ்ந்த ஓர் பேரினம் அந்நிய படையெடுப்புகளால் சிறிது சிறிதாக நம் வழிப்பாட்டு முறையையும் வாழ்வியல் முறையையும் இழக்க நேரிட்டது. இது முழுக்க முழுக்க அந்நிய படையெடுப்பின் திட்டமிட்ட சூழ்ச்சியே எனலாம்.

வன்னியர் குலகுரு '’ஜம்பு மகாரிஷி’’யை லிங்க வடிவமாகவும் நீர் லிங்க ஈச தத்துவத்திலும் வணங்கினார்கள் . வன்னியக் குல சத்திரியர்களின் குலகுருவான ’’ஜம்பு மகாரிஷி’’யை போற்றி வணங்குவது நம் குல வாழ்வியலைப் கடைப்பிடிக்கவும் நம் குல பெருமையை மாண்பைக் காப்பது மட்டுமல்ல எதிர்கால சந்ததிகளை அறநெறி படுத்தவும், இறையுள்ளம் கொள்ளவும், இயற்கையைப் பாதுகாத்து நம் வாழ்வில் நெறிமுறைகளைக் கடைப்பிடித்து அறம், வீரம், அன்பு, கருணை, தர்மம்,  கொடை, நாட்டுப்பற்று, சமூக ஒற்றுமை என நாம் வாழும் நெறிப்படுத்தப்பட்ட வாழ்வு நம்மை சுற்றி இருப்போருக்கு கிடைக்க நமது குலகுரு ஜம்பு மகாரிஷி தந்த குலகுரு வழிபாட்டை மீள் உருவாக்கம் செய்வோம்!

 

வாசகர்களின் கவனத்திற்கு:

இந்த நூலில் எங்கெங்கு ’’ஜம்பு’’ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அதை சம்பு என்றும் படித்து நினைவில் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

ஜம்பு தீவு – சம்பு தீவு

ஜம்பு மகாரிஷி - சம்பு மகாரிஷி

ஜம்புதாச அடிகளார் - சம்புதாச அடிகளார்

 

                                                                                                                                                                    - ஆசிரியர்