🔔 அடிகளாரின் தத்துவங்கள்
இங்கு யாருடைய வாழ்வினை பற்றியும் நீ கவலை கொள்ள வேண்டாம் அவர்களுடைய வாழ்வினை வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள்

ஜம்பு மகாரிஷி திருக்கோயில் - ஆசிரமம்

Jambhu Magarishi Thirukkoyil - Aashramam

ஜம்பு மகாரிஷி வழிபாட்டுச் சங்கம்

ஜம்பு மகாரிஷி

என நம்முள் இறைத்தன்மையை உணரச் செய்வதற்காக தத்துவ வழிபாடு முறைகளை உருவாக்கம் செய்தனர். அதன் வழியில் முதல் முன்னோடியாக விளங்கியவர் நமது வன்னியர் குலகுருவான "ஜம்பு மகாரிஷி" ஆவார்.

’’ஜம்பு மகாரிஷி’’  இன்றைக்கு உள்ள இந்திய துணைக் கண்டத்தின் தென்கோடியில் கடல்கோளால் மூழ்கிப் போன குமரிக்கண்டத்தில் அவதரித்த மகாரிஷி ஆவார். அவர் அங்கு வாழ்ந்த காலத்தில் அந்த தீவு முழுமைக்கும் வெந்நாவல் மரங்களை தன் தவ வலிமையால் அந்த கண்டம் முழுவதும் உயிர் பெறச் செய்தார். அதன் காரணமாக அந்த தீவுக்கு "ஜம்பு நாவலந்தீவு" என்று பெயரானது.

வெந்நாவல் மரத்தின் இலைகள், பட்டைகள், பழங்கள், வேர்கள் என அம்மரத்தின் அனைத்துப் பாகங்களில் உள்ள உன்னத தெய்வீக மருத்துவத் தன்மையை மக்களுக்கு உணர்த்தியதில் மக்கள் அனைவரும் அந்த வெந்நாவல் மரத்தினைப் போற்றி வணங்கி வழிப்பட்டும் பயன்படுத்தியும் வந்ததாலும் அந்த தீவு "ஜம்பு நாவலந் தீவு’’ என்று அழைக்கப்பட்டது.

Read More


ஜம்புதாச அடிகளார்

உலகில் வாழும் அனைத்து மானிடர்களைப் போன்று சிறு வயதில் தன் வாழ்வினை தொடங்கிய ஜம்புதாச அடிகளார் ஒரு காலகட்டத்தில் பொதுவான மானிட வாழ்வின் செயல்பாட்டில் இருந்து இறைச் சிந்தனைக்கு மனம் மாறுகிறார்.

அதன் விளைவாக இறைத்தேடலில் பல வரலாற்று ஆய்வு நூல்களைத் தேடிப் பிடித்துப் படித்து, பல இறை ஞானவான்களைச் சந்திப்பது, குருமார்களைச் சந்திப்பது எனப் பல ஆய்வுகளைச் செய்ய உலகின் பல்வேறு நாடுகளுக்குக் கடல்கடந்துச் சென்றுவந்துள்ளார்.

”ஆயிரம் புறகுருமார்களைக் காண்பாய்; உன்னுள் இருக்கும் அககுருவைக் காணும் வரைக்கும்! கண்ட அககுரு உணர்த்திடுவாரே உமக்கான குலகுருவை!”

என்பதைப் பிறகு அறிகிறார்.

அதன் பிறகுத் தான் பிறந்த வன்னியர் குலத்தைப் பற்றிய வரலாற்றுத் தரவுகளைத் தேடி அலைகிறார். அதன் விளைவாக பல்வேறு அரிய அதிசயத்தக்க செய்திகள் கிடைக்கப் பெறுகிறார். அப்படி ஆய்வுகளை மேற்கொண்டதின் பயனாகத்தான், தெற்கே குமரிக்கண்டத்தில் அவதரித்த ‘’ஜம்பு மகாரிஷி’’ பற்றிய அரிய தகவல்களைப் பெறுகிறார்.

Read More

Our Activities

We Provide Best Activities

மாதேஸ்வரன் மாதம்மாள் சிவாலயத்தில் 1008 சங்கு அபிஷேக பெருவிழா...

Read More

இன்று 26/10/2025 *பிரைட் செஸ் அகாடமி* தலைமையில் திருப்பத்தூர...

Read More

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் கண்ணாலப்பட்டி கி...

Read More

05/11/2025 நாளை *மத்தூர்* அருள்மிகு சோமேஸ்வரர் ஜோதிர்லிங்க த...

Read More